ஆசிரியர் திட்டியதால் விபரீதம்: பிளஸ்-1 மாணவி தற்கொலை!!

சென்னையில் ஆசிரியர் திட்டியதால் 11-ம் வகுப்பு பள்ளி மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பல்லாவரம் அடுத்த பொழிச்சலூர் பகுதியில் வசித்து வரும் 14 வயது சிறுமி, தனியார் பள்ளியில் பிளஸ் 1 படித்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் மாணவி பாடங்களை சரியாக படிக்கவில்லை என கூறப்படுகிறது.

இதனிடையே அவரது ஆசிரியர் மாணவியை கண்டித்தாக கூறப்படுகிறது. இதனால் விரக்தி அடைந்த மாணவி கடந்த சில தினங்களாக யாரிடமும் சரியாக பேசாமல் இருந்து வந்தாக கூறப்படுகிறது.

இந்த சூழலில் பள்ளிக்கு தயாராவது போல் ரெடியாகி கொண்டிருந்த மாணவி, வீட்டில் யாரும் இல்லாத பட்சத்தில் னது துப்பட்டாவால் தன்னைத்தானே கழுத்தை இறுக்கி கொண்டு தற்கொலை செய்து கொண்டார்.

பின்னர் வீட்டிற்கு வந்த பெற்றோர் தனது மகள் மகள் பிணமாக கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.