ஆசிரியர் தகுதி தேர்வு ஒத்திவைப்பு: எதற்காக தெரியுமா?

தமிழகத்தில் செப்டம்பர்  10 முதல் 15ஆம் தேதி வரை நடைபெறவிருந்த ஆசிரியர் தகுதி தேர்வு நிர்வாக காரணங்களால் ஒத்திவைக்கப்படுவதாக ஆசிரியர் தேர்வு வாரியம் கூறியுள்ளது.

கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக அரசு தேர்வுகள் நடைபெறாமல் இருந்தது. இந்நிலையில் தொற்று பரவல் சற்று படிபடியாக குறைந்துள்ளதால் நடப்பாண்டில் தேர்வு நடத்தப்படும் என கூறப்பட்டது.

அதன் படி, வருகின்ற தேர்வு செப்டம்பர் 10 முதல் செப்டம்பர் 15 ஆகிய தேதிகளில் ஆசிரியர் தகுதித் தேர்வு நடைப்பெறும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டு இருந்தது.

தற்போது நிர்வாக காரணங்களால்  செப்டம்பர்  10 முதல் 15ஆம் தேதி வரை நடைபெறவிருந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக ஆசிரியர் தேர்வு வாரியம்  தெரிவித்துள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment