ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி: ஐகோர்ட் அதிரடி!!

ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே கலந்தாய்வில் அனுமதிக்க வேண்டும் என்று தமிழக பள்ளிக்கல்வி துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

தமிழகத்தில் உள்ள பட்டதாரி ஆசிரியர்கள், உயர் நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் பதவி உயர்விற்கு நடப்பாண்டில் ஜூலை 12-ம் தேதி முதல் 14-ம் தேதி வரையில் கலந்தாய்வு நடைப்பெறும் என அறிவிக்கப்பட்டது.

தேவர் தங்கக்கவசம்: ஈபிஎஸ், ஓபிஎஸ் தரப்புக்கு வழங்க மறுப்பு !!

இந்நிலையில் 41 இடைநிலை ஆசிரியர்கள் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அதில் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மட்டுமே பதவி உயர்வு வழங்க வேண்டும் என குறிப்பிடப்பட்டு இருந்தது.

இதற்கிடையில் வழக்கின் விசாரணை அமர்வானது இன்று வந்தது. அப்போது பேசிய நீதிபதி சிறந்த கல்வித் தகுதியை பெறாத ஆசிரியர்களால் தரமான கல்வியை வழங்க முடியாது என கூறினார்.

பெரும் சோகம்! உலகின் அழுக்கு மனிதர் மரணம்!!

மேலும், தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களை பட்டதாரி ஆசிரியர்களாகவும், தலைமை ஆசிரியர்களாகவும் பதவி உயர்வு வழங்குவது குறித்த புதிய அறிவிப்பாணையை வெளியிட வேண்டும் என உத்தரவு பிறப்பித்திருந்தார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment