பள்ளியில் ஆசிரியையுடன் உல்லாசம்: சிக்கிய தலைமை ஆசிரியர்.. பின்னணி என்ன?

ஆந்திராவில் தலைமை ஆசிரியர் சக ஊழியருடன் நெருக்கமாக இருக்கும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டம் மசூலிப்பட்டணம் பகுதியில் அரசு உருதுமொழி உண்டு உறைவிட பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் 48 வயதில் ஆனந்த்பிரசாத் என்பவர் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கும் ஒப்பந்த ஆசிரியரும் நண்பர்களாக பழகி வந்தனர்.

அதிமுகவில் பரப்பரப்பு! அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் காரில் ஆசிட் வீச்சு!!

நாளடைவில் கள்ளக்காதலாக மாறவே இருவரும் தனிமையில் சந்தித்து வந்துள்ளனர். அந்த வகையில் பள்ளி வேலையில் இருவரும் தனிமையில் உல்லாசமாக இருந்ததாக கூறப்படுகிறது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த மாணவன் ஒருவர் தன்னுடைய செல்போனில் வீடியோ எடுத்து மற்ற மாணவிகளுக்கும் அனுப்பி உள்ளார்.

இதனை பார்த்த தலைமை ஆசிரியர் மாணவனை பிரம்பால் தாக்கியதாக தெரிகிறது. இருப்பினும் வீடியோ மாணவர்களின் பெற்றோர்களுக்கு தெரிந்து அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் விவகாரம் தொடர்பாக காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். தற்போது ஆனந்த்பிரசாத்தை போலீசார் கைது செய்துள்ளதாக கூறப்படுகிறது.

பொங்கல் பரிசு தொகுப்பு.. தமிழக முதல்வர் ஆலோசனை..!!

அதே சமயம் விவகாரம் தொடர்பாக கல்வித்துறை அதிகாரிகளுக்கு தெரிய வரவே ஆனந்த்பிரசாத்தை சஸ்பெண்ட் செய்ய உயர் அதிகாரிகளுக்கு பரிந்துரைத்துள்ளனர். இந்த சம்பவம் மாணவர்கள், பெற்றோர்கள் மத்தியில் பதறவைத்துள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.