ம.பியில் கொடூரம்!! சிறுமியின் கையை உடைத்த ஆசிரியர் கைது..!!

மத்திய பிரதேசத்தில் கிளி என்ற வார்த்தையை சொல்ல முடியாத சிறுயை டியூஷன் ஆசிரியர் கையை உடைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மத்திய பிரதேச மாநிலம் ஹபிப்கஞ்ச் பகுதியில் 22 வயதுடைய பிரயாக் விஸ்வகர்மா என்பவர் டியூசன் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் நுழைவுத் தேர்வுக்கு தயாராக 5 வயது சிறுமி பிரயாக் விஸ்வகர்மா டியூசன் சென்டரில் சேர்ந்துள்ளார்.

குற்றாலத்தில் பயங்கரம்! அருவியில் தவறி விழுந்த சிறுமி… துரிதமாக செயல்பட்டு மீட்ட இளைஞர்!!

இந்த சூழலில் ஆசிரியர் கிளி என்ற வார்த்தையை கூற கட்டாயப்படுத்தியதாக தெரிகிறது. இருப்பினும், சிறுமிக்கு உச்சரிப்பு வராமல் இருந்தால் ஆத்திரத்தில் சிறுமியின் கைகளை உடைத்து கண்ணத்தில் அறைந்துள்ளார். இதனால் பலத்த காயமடைந்த சிறுமி போபாலில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் குறித்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் டியூசன் ஆசிரியர் பிரயாக் விஸ்வகர்மாவை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

அட கொடுமையே!! பொங்கல் பரிசு குப்பை வண்டியில் சென்ற அவலம்..!!

அதே போல் சிறுமியின் பெற்றோர் கொடுத்த தகவலில்.. தங்களுடைய மகளை நல்ல பள்ளியில் சேர்க்க வேண்டும் என்பதால் தினமும் மாலையில் ஆசிரியரின் வீட்டிற்குச் சென்று கல்வி பயின்றதாக தெரிவித்தனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.