அம்மா உணவகத்திற்கு போட்டியாக நடமாடும் தேநீர் கடை திட்டம்! கொடியசைத்து திறந்துவைத்தார் ஸ்டாலின்!!

தமிழக முதல்வர் ஸ்டாலின் நாள்தோறும் புதுப்புது திட்டங்களை தொடங்கி வைத்திருக்கிறார் அவற்றை நேரடியாகவோ அல்லது காணொளி வாயிலாகவோ தமிழக முதல்வர் ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.

இவை பலவும் மக்களுக்கு பயன் உள்ளதாகவே அமைந்துள்ளது. அந்த வரிசையில் இன்று சென்னையில் மற்றொரு புதிய திட்டத்தினை தொடங்கி வைத்துள்ளார் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின்.இந்தத் திட்டம் கடந்த ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட அம்மா உணவகத்தை திட்டத்தை போன்று காணப்பட்டுள்ளது.

அதன்படி ஏழைகளின் உணவாகவே காணப்படுகின்ற தேநீர் கடைகளை முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்தார். இவை நடமாடும் தேனீர் கடை ஆகும். அதன்படி 20 நடமாடும் தேநீர் கடைகளை தமிழக முதல்வர் ஸ்டாலின் சென்னையில்  இன்று தொடங்கி வைத்தார்.

இந்த நடமாடும் தேநீர் கடை திட்டத்தினை சென்னை தலைமைச் செயலகத்தில் கொடியசைத்து தொடங்கிவைத்தார் முதலமைச்சர் ஸ்டாலின். சிறு தேயிலை விவசாயிகள் பயன்பெறும் வகையில் தேநீர் கடைகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளன என்றும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.இதனால் ஏழை எளிய மக்களும் பயனடைவர் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment