Connect with us

அப்பாடா..! ”டீ செலவு மிச்சம்” – அண்ணாமலை..

202108120843172026 Tamil News Tamil News Annamalai says PM Modi sown hope in minds farmers SECVPF

Tamil Nadu

அப்பாடா..! ”டீ செலவு மிச்சம்” – அண்ணாமலை..

அப்பாடா..! ”டீ செலவு மிச்சம்” – அண்ணாமலை..

சென்னை தி.நகர் பாஜக தலைமை அலுவலகத்தில், பண்டிட் தீனதயாள் உபாத்யாயாவின் நூலினை தமிழக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வெளியிட மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் பெற்று கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பாஜக  மாநில  தலைவர் அண்ணாமலை ஆளுநர் என்பது அரசியலையும்  தாண்டி தமிழகத்தின் பிரதிநிதியாக இருப்பதாகவும், தேநீர் விருந்து என்பது ஒரு மரபு என குறிப்பிட்டார். இன்னும் எத்தனை ஆண்டுகளுக்கு தமிழக மக்களின் காதில் திமுகவினர் பூ சுற்றுகிறார்கள் என கூறினார்.  தேநீர் விருந்தினை பிறக்கணிப்பதால் டீ செலவு மீதி என தெரிவித்துள்ளார்.

குறிப்பாக தேநீர் விருந்து தொடர்பாக ஆளுநர் நான்கு நாட்களுக்கு முன் அழைப்பு விடுத்த நிலையில் தற்போதுதான் அனைத்து அமைச்சர்களுக்கும் தேநீர் விருந்தை புறக்கணித்த தொடர்பாக யோசனை வந்து உள்ளதா என கேள்வியெழுப்பியுள்ளார்.

இதனிடையே தமிழகத்திற்கு மட்டும் தான் முதலமைச்சர் என்றும் திமுக உறுப்பினர்களுக்கு அவர் முதலமைச்சர் இல்லை எனவும் இதனை அடிக்கடி நியாபக படுத்துவதற்கான கடமை பாஜகவிற்கு உள்ளதாக அவர் கூறினார்.

மேலும், நீட் தேர்வு என்பது உச்ச நீதிமன்றம் உறுதி செய்யப்பட்ட விஷயம் எனவும் இந்த சூழலில் எதற்காக ஆளுநரை வைத்து அரசியல் செய்கிறீர்கள் என கூறியுள்ளார். தேனீர் விருந்திற்கு திமுக அமைச்சர்கள் புறக்கணிப்பதால்  இந்தியாவில் எந்த ஒரு மாற்றமும் ஏற்படுவதில்லை என்றும் இன்று இருக்கும் ஆளுநர் நாளையும் ஆளுநராக தான் இருப்பார் என கூறியுள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in Tamil Nadu

To Top