காலையில் டீ ,காபிக்கு பதிலாக இது சாப்பிடுங்க … வேற லெவல் பயன் அனுபவிங்க….

காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் டீ அல்லது காபி குடிப்பது நம்மில் பலர் பழக்கமாக வைத்துள்ளோம். காலை எழுந்தவுடன் சூடாக டீ ,காபி குடிப்பது நம்மில் பலருக்கு பல உடல் உபாதைகளுக்கு வழிவகுக்கிறது. அதிகமாக நாம் எடுத்துக்கொள்ளும் இந்த டீ ,காபி வயிறு உபாதைகளுக்கும் காரணமாக அமைகிறது.

மேலும் நாம் காலை வெறும் வயிற்றில் எடுக்கும் உணவு நாள் முழுவதும் நாம் சுறுசுறுப்பாக இருக்க முக்கிய காரணமாக அமைகிறது , எனவே நாம் உணவை தேர்வு செய்யும் போது கவனமாக இருக்க வேண்டும். ஊட்டசத்துள்ள கலோரிகள் குறைவாக உள்ள உணவுகளை நாம் முதலிடம் கொடுக்க வேண்டும்.

அதனால் இந்த டீ , காப்பிக்கு பதிலாக இந்த மூன்று உணவுகளை சாப்பிடுவது ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கு அடிப்படையாக அமையும் என உணவு நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர்.

அஜீரண கோளாறுகள் இருப்பவர்கள் மற்றும் அவ்வப்போது இனிப்பு சாப்பிட விரும்புபவர்கள் காலையில் எழுந்தவுடன் வாழைப்பழம் சாப்பிடலாம்

மாதவிடாய் சிக்கல் உள்ள பெண்கள் மற்றும் நாள் முழுவதும் சோர்வாக உணரும் நபர்கள் ஆறிலிருந்து ஏழு உலர் திராட்சைகளை இரவு ஊற வைத்து காலையில் சாப்பிடலாம்

சர்க்கரை நோய் தூக்கமின்மை மலட்டுத்தன்மை போன்ற உடலும் உபாதைகளை கொண்டவர்கள் நான்கிலிருந்து ஐந்து பாதாமை இரவை தண்ணீரில் ஊறவைத்து பகலில் சாப்பிட்டு வந்தால் சிறப்பான பலன்களை எதிர்பார்க்கலாம்.

வீடே மண மணக்கும் பாட்டிக் கைபக்குவத்தில் மிளகு ரசம்! ரெசிபி இதோ …

காலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் குடித்துவிட்டு மேல் குறிப்பிட்டவற்றில் ஏதேனும் ஒன்றை சாப்பிட்டு கால் மணி நேரம் கழித்து டி அல்லது காபி குடித்து விட்டு ஒரு மணி நேரத்திற்கு பிறகு காலை உணவு எடுத்துக் கொள்ளலாம்

உடற்பயிற்சி செய்பவர்கள் இந்த உணவுகளை சாப்பிட்டு 20 நிமிட இடைவெளிக்கு பிறகு உடற்பயிற்சி செய்யலாம் இந்த பழக்கத்தை கடைபிடித்து வந்தால் மேம்பட்ட ஆரோக்கியத்தை உணர முடியும் என உணவில் நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.