வொர்க் ஃப்ரம் ஹோம் தொடர்கிறதா? டிசிஎஸ் முக்கிய அறிவிப்பு

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக உலகம் முழுவதும் ஸ்தம்பித்தது என்பதும் இந்தியா உள்பட பல நாடுகளில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதனை அடுத்து டிசிஎஸ் உள்பட பல ஐடி நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை வொர்க் ப்ரம் ஹோம் என்ற நிலைக்கு கொண்டு வந்தது என்பதும் வீட்டிலிருந்தே ஊழியர்கள் பணி செய்து கொண்டு இருந்தார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்தியா உள்பட அனைத்து நாடுகளிலும் தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது. இதனை அடுத்து டிசிஎஸ் நிறுவனம் வொர்க் ப்ரம் ஹோம் முறையை நிறுத்திவிட்டு மீண்டும் அலுவலர்களை அலுவலத்திற்கு வரவழைக்க முடிவு செய்துள்ளது.

நவம்பர் 15ஆம் தேதி முதல் டிசிஎஸ் நிறுவன ஊழியர்கள் அனைவரும் அலுவலத்திற்கு வர வேண்டுமென்றும் தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு மட்டுமே அனுமதி என்றும் தெரிவித்துள்ளது. டிசிஎஸ் போலவே மற்ற ஐடி நிறுவனங்களும் விரைவில் அலுவலர்களை அலுவலகத்துக்கு வருவதற்கும் திட்டமிட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment