உலகின் மதிப்புமிக்க இரண்டாவது நிறுவனம் டிசிஎஸ்! முதல் 25 இடங்களில் எத்தனை இந்திய நிறுவனங்கள் தெரியுமா?
உலகமே ஊரடங்கு ஏற்பட்டு பல பொருளாதார இழப்பு சந்தித்துள்ள நிலையில் தகவல் தொழில்நுட்பம் நாளுக்கு நாள் பொருளாதாரத்தில் அதிகளவு உயர்ந்துகொண்டே காணப்படுகிறது. அதன்படி நாட்டின் முன்னணி நிறுவனமான டிசிஎஸ், ஐபிஎம் நிறுவனத்தை நாலாவது இடத்திற்கு தள்ளி இரண்டாவது இடத்தினைப் பிடித்துள்ளது.
ஐடி சேவை நிறுவனங்களை தரப்படுத்தலில் முன்னணியில் இருக்கும் பிரான்ட் பைனான்ஸ் ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் அக்சன்சர் உலகின் மிகவும் மதிப்புமிக்க மற்றும் வலிமையான தகவல் தொழில்நுட்ப சேவை நிறுவனம் என்று கூறியுள்ளது.
முதலிடத்தில் உள்ள அக்சன்சர் நிறுவனத்தின் 2022 ஆம் ஆண்டின் மதிப்பு 36.19 பில்லியன் டாலராக காணப்படுகிறது. இதில் இரண்டாவது இடத்திற்கு வந்துள்ள டிசிஎஸ் நிறுவனத்தின் மதிப்பு 16.78 பில்லியன் டாலர் ஆகும். மூன்றாவது இடத்தில் உள்ள இன்போசிஸ் இன் மதிப்பு 12.77 பில்லியன் டாலராக காணப்படுகிறது.
கடந்த ஆண்டை விட 34 சதவிகிதம் சரிவு கண்டுள்ளதன் காரணமாக 4-வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது ஐபிஎம். உலக அளவில் முதல் 25 இடங்களில் டிசிஎஸ், இன்போசிஸ் தவிர மேலும் 4 இந்திய நிறுவனங்களும் உள்ளன.
ஏழாவது இடத்தில் விப்ரோ நிறுவனம் உள்ளது. எட்டாவது இடத்தில் எச்சிஎல் நிறுவனம் காணப்படுகிறது. 15வது இடத்தில் டெக் மகேந்திரா நிறுவனமும், இருபத்தி இரண்டாவது இடத்தில் எல்&டி இன்போடெக் நிறுவனமும் உள்ளது.
