Connect with us

வரி ஏய்ப்பு புகார்! M.G.M குழுமத்திற்கு சொந்தமான இடங்களில் அதிரடி ஆய்வு..

raid

Tamil Nadu

வரி ஏய்ப்பு புகார்! M.G.M குழுமத்திற்கு சொந்தமான இடங்களில் அதிரடி ஆய்வு..

எம்ஜிஎம் நுறுவனத்தின் குழுமங்களில் 40-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமானத் வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் தாம்தோம் பகுதியில் முத்துப்பாண்டியன் அவன்யூ என்ற தெருவில் எம்ஜிஎம் குழும தலைவர் நேசமணி மாறன் வீட்டில் இன்று காலை முதல் சோதனைக்காக அதிகாரிகள் வந்துள்ளனர். இருப்பினும் எம்ஜிஎம் குழும தலைவர் நேசமணி மாறன் தற்போது வெளிநாடு சென்றுள்ளதாக கூறப்படுகிறது.

இதனிடையே வீட்டின் சாவி யாரிடமும் இல்லை என காவலாளிகள் கூறியதால் வீட்டைத் திறக்க முடியாமல் அதிகாரிகள் காத்திருப்பதாக தெரிகிறது. இதனிடையே வீட்டின் பூட்டை உடைத்து சோதனை நடத்துவதற்கு அதிகாரிகள் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதோடு வீட்டிற்கு அருகில் குடோனில் சோதனை நடைபெற்று வருவதாகவும் மயிலாப்பூரில் உள்ள கார்ப்பரேட் அலுவலகத்திலும் சோதனை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

மேலும், இந்த சோதனையானது இன்றும் நாளையும் நடைபெற வாய்ப்புள்ளதாக  அதிகாரிகள் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in Tamil Nadu

To Top