Connect with us

பெட்ரோல் மீதான வரி குறைப்பு: நிதியமைச்சர் அதிரடி அறிவிப்பு!

தமிழகம்

பெட்ரோல் மீதான வரி குறைப்பு: நிதியமைச்சர் அதிரடி அறிவிப்பு!

dfceb48e2c11c1749afdd9d4fb0de021

பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரியை குறைக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் பல மாதங்களாக மத்திய மாநில அரசுகளுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால் அந்த கோரிக்கையை மத்திய மாநில அரசுகளால் கண்டுகொள்ளப்படாமல் உள்ளது என்பது தெரிந்ததே

இந்த நிலையில் பெட்ரோல் மீதான வரியை திமுக ஆட்சி ஏற்பட்டால் குறைக்கப்படும் என திமுக தலைவர் முக ஸ்டாலின் அவர்கள் தேர்தல் அறிக்கையில் தெரிவித்திருந்தார். தேர்தல் அறிக்கையில் அவர் குறிப்பிட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றி வரும் நிலையில் இன்று தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் பெட்ரோல் மீதான வரி குறைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன

பெட்ரோல் விலை மீதான வரி லிட்டருக்கு ரூபாய் மூன்று குறைக்கப்பட்டுள்ளதாக சற்றுமுன் பட்ஜெட்டை தாக்கல் செய்த நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் அவர்கள் தெரிவித்துள்ளார். இதனால் சென்னை உள்பட தமிழகம் முழுவதும் பெட்ரோல் விலை ரூபாய் மூன்று குறையும் என்பது குறிப்பிடத்தக்கது

இதேபோல் மத்திய அரசு பெட்ரோல் மீதான வரியை குறைத்தால் மேலும் பெட்ரோல் விலை குறையும் என்பது குறிப்பிடத்தக்கது உழைக்கும் வர்க்கத்திற்கு நடுத்தர வர்க்கத்தினருக்கும் பெரிய நிவாரணமாக இந்த பெட்ரோல் விலை குறைப்பு அமையும் என்றும் இதனால் ஆண்டுக்கு ஆயிரத்து 560 கோடி ரூபாய் மாநில அரசுக்கு இழப்பு ஏற்படும் என்றும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top