வரி செலுத்துபவர்களுக்கு நன்றி; கூட்டுறவு சங்கங்கள் செலுத்தும் வரி குறைப்பு!
நம் இந்தியாவில் பலரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த 2022 ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. பொதுவாக பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்கு முன்பு பல்வேறு துறையிடமிருந்து கோரிக்கைகளும், எதிர்பார்ப்புகளும், விண்ணப்பங்களும் பெறப்படும்.
அதன் பின்னர் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். இந்த நிலையில் இந்த ஆண்டு பல்வேறு கட்டுப்பாடுகள் மத்தியில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. இதில் வேலைவாய்ப்பு, ரயில்வே, விவசாயம், நீர்ப்பாசனம் உள்ளிட்ட பலவற்றிகான நிதி ஒதுக்கீடும் திட்டங்களும் அறிமுகப்படுத்தப்பட்டு வந்தன.
அந்த வரிசையில் வருமான வரிக்கான விலக்கு உச்ச வரம்பு உயருமா? என்று பலரும் எதிர்பார்த்துக் கொண்டுள்ளனர். முதலில் நாட்டில் வரி செலுத்தும் ஒவ்வொருவருக்கும் நன்றி என்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார்.
வரி செலுத்துவது எத்தகைய கடமை என்பதை மகாபாரத குறிப்பில் சுட்டிக் காட்டி நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசினார். கூட்டுறவு சங்கங்கள் செலுத்தும் வரியை 18 சதவிகிதத்திலிருந்து 15 ஆக குறைக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
