என்னதான் தேசிய அளவில் உரிமம் வைத்திருந்தாலும் தமிழ்நாட்டுக்குள் வரி கட்டாயம்!

என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில் என்பதற்கு ஏற்ப நம் தமிழகத்தில் அனைத்து வளங்கள் வனங்கள் காணப்படுகிறது. இதனால் பல பகுதிகள் சுற்றுலாத்தலங்களாக தமிழகத்தில் காணப்படுகிறது.ஊட்டி

குறிப்பாக கன்னியாகுமரி, ஊட்டி, கொடைக்கானல் போன்ற சுற்றுலாத் தலங்களில் தமிழகம் மட்டுமின்றி உலக அளவில் சுற்றுலா விரும்பிகளால் ரசிக்கும் பகுதியாக காணப்படுகிறது.

மேலும் பல மாநிலங்களில் இருந்தும் தமிழகத்திற்கு கூட்டம்கூட்டமாக வாகனங்களில் வேன்களில் வந்து தங்கி சுற்றுலாவை மகிழ்ச்சியோடு கண்டு மகிழ்வர்.

ஹை கோர்ட் இந்தநிலையில் தற்போது அவர்களுக்கு திடீர் என்று சென்னை உயர்நீதிமன்றம் பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. அதுவும் குறிப்பாக சுற்றுலா பேருந்துகள் மாநில வரி செலுத்த வேண்டும் என்று ஹை கோர்ட் கூறியுள்ளது.

அதன்படி சுற்றுலா பேருந்துகளை இனி தமிழகத்திற்குள் இயக்கும்போது கண்டிப்பாக மாநில வரி செலுத்த வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சுற்றுலா பேருந்துமேலும் அந்த சுற்றுலா வாகனங்கள் “அகில இந்திய அளவில் உரிமம்” பெற்று இருந்தாலும் கூட தமிழகத்தில்  இயக்கும்போது  கண்டிப்பாக மாநில வரி செலுத்த வேண்டும் என்று ஹை கோர்ட் கூறியுள்ளது.

மேலும் சுற்றுலா பேருந்து உரிமையாளர்கள் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் இத்தகைய தீர்ப்பளித்தார்.

மாநில அரசுகள் விதிக்கும் சிறப்பு அதிகாரத்தை எக்காரணம் கொண்டும் மத்திய அரசு எடுத்துக்கொள்ள முடியாது என்றும் உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் கூறியுள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment