Amazon, Paytm-க்கு போட்டியாக களமிறங்கிய டாடா! ஏழாம் தேதி முதல் அறிமுகமாகும் ‘TATA NEU’!!
உலகளவில் டாடா நிறுவனம் முதலாவது இடத்தை வகித்து வருகிறது. இதனால் இந்தியாவில் ஏர் இந்தியா நிறுவனத்தை பல ஆண்டுக்கு பின்பு டாடா நிறுவனம் மீண்டும் கையகப்படுத்தியது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் டாடா நிறுவனத்தின் மூலமாக “டாடா நியூ” செயலி ஒன்று அறிமுகப்படுத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இது டாடா குழுமத்தின் அனைத்து ஆன்லைன் சேவைகளை உள்ளடக்கிய அப்ளிகேஷன் ஆகும் இது அமேசான், பேடிஎம், ஜியோmard க்கு போட்டியாக காணப்படும் என்பதும் என்று கூறப்படுகிறது.
அதன்படி ஏப்ரல் 7ஆம் தேதி முதல் டாடா நியூ செயலி அறிமுகமாகி உள்ளது. குரோமாவில் மின்சாதன பொருட்கள், வெப்சைட்டில் ஆடைகள் என பல்வேறு ஆன்லைன் ஷாப்பிங் சேவைகளை வழங்கும் டாட்டா குழுமம், தற்போது டாடா குழுமத்தின் அனைத்து ஆன்லைன் ஷாப்பிங் சேவைகளையும் உள்ளடக்கிய ஒற்றை செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது.
டாடா நியூ செயலி மூலம் ஷாப்பிங் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு நியூ coins வெகுமதியாக வழங்க திட்டமிட்டுள்ளது. டிஜிட்டல் பண பரிவர்த்தனையில் புதிய பரிணாமத்தில் களமிறங்கும் டாட்டா குழுமம் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதனால் அமேசான் பேடிஎம் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு இது சரியான போட்டியாக அமையும் என்று நிபுணர்கள் பேசிக்கொள்கின்றனர்.
