Connect with us

ஐபிஎல் போட்டியை ஸ்பான்சர் செய்ய முன்வரும் டாடா நிறுவனம்: பரபரப்பு தகவல்

Sports

ஐபிஎல் போட்டியை ஸ்பான்சர் செய்ய முன்வரும் டாடா நிறுவனம்: பரபரப்பு தகவல்

87b9ae6f0659971d077063a4dbe41c8f

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த மார்ச் மாதம் நடைபெற வேண்டிய ஐபிஎல் போட்டி கொஞ்சம் கொஞ்சமாக ஒத்தி வைக்கப்பட்டு தற்போது செப்டம்பர் 19-ஆம் தேதி தொடங்க உள்ளது என்பது தெரிந்ததே

இந்த போட்டியில் கலந்து கொள்ளவிருக்கும் 8 அணி வீரர்களுக்கும் மூன்று முறை கொரோனா பரிசோதனை செய்யவேண்டுமென்றும் கொரனோ பாதிப்பு இல்லாத வீரர்கள் மட்டுமே ஐக்கிய அரபு எமிரேட் நாட்டிற்கு அனுப்பப் படுவார்கள் என்றும் பிசிசிஐ தெரிவித்துள்ளது

இதனை அடுத்து தோனி உள்பட பல வீரர்கள் முதற்கட்ட பரிசோதனை முடித்துள்ளனர். இந்த நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள் நாளை சென்னை வரவிருப்பதாகவும், அதன் பின்னர் 21ஆம் தேதி ஐக்கிய அரபு எமிரேட் செல்ல இருப்பதாகவும் கூறப்படுகிறது

இந்த நிலையில் ஐபிஎல் போட்டியை ஸ்பான்சர் செய்யும் நிறுவனமாக ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்த விவோ இந்திய சீனா நாடுகளுக்கு இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக அந்நிறுவனம் தற்போது ஸ்பான்சர்ஷிப்பில் இருந்து விலக்கப்பட்டது

இதனை அடுத்து ரிலையன்ஸ் நிறுவனம், கொக்கோ கோலா, அமேசான், உள்பட பல நிறுவனங்கள் ஐபிஎல் போட்டியை ஸ்பான்சர் செய்ய முன்வந்துள்ளன

இந்த நிலையில் தற்போது இந்த போட்டியில் டாடா நிறுவனமும் குதித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது இந்நிறுவனம் ஐபிஎல் போட்டியை ஸ்பான்சர் செய்வது உறுதி செய்யப்பட்டால் இந்த ஐபிஎல் போட்டி ‘டாடா ஐபிஎல்’ என்று அழைக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in Sports

To Top