Connect with us

69 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் இணைந்தது; டாடா நிறுவனம் வசமானது ஏர் இந்தியா!

tata air india

செய்திகள்

69 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் இணைந்தது; டாடா நிறுவனம் வசமானது ஏர் இந்தியா!

69 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் இணைந்தது; டாடா நிறுவனம் வசமானது ஏர் இந்தியா!

உலகில் ஏகப்பட்ட நிறுவனங்கள் உருவாகிக் கொண்டு வருகின்றன. அவை அனைத்து பொருட்கள் தயாரிப்பிலும் தங்களது காலைப் பதித்து வருகின்றனர். அவற்றுள் ஒன்றுதான் டாடா நிறுவனம். டாடா  நிறுவனம் உலகில் உள்ள பல நாடுகளில் காணப்படுகிறது.

இந்த நிலையில் டாடா நிறுவனம் தனக்கு சொந்தமான விமான சேவை ஒன்றை தன் வசம் இழுத்துக் கொண்டதாகக் காணப்படுகிறது. அதன்படி டாடா நிறுவனம் வசமானது மிகப் புகழ்பெற்ற ஏர் இந்தியா.

ஏர் இந்தியா நிறுவனத்தை டாடா நிறுவனத்திடம் ஒப்படைத்து தொடர்பான அனைத்து நடைமுறைகளும் நிறைவு செய்யப்பட்டுள்ளது. ஏர் இந்தியா பங்குகளை தனியாருக்கு விற்கும் நடைமுறை முடிந்ததாக ஒன்றிய அரசின் பொதுத்துறை செயலாளர் கூறியுள்ளார்.

டாடா குழுமத்தைச் சேர்ந்த டலைஸ் பிரைவேட் நிறுவனத்துக்கு ஏர் இந்தியாவின் அனைத்து பங்குகளும் மாற்றம் செய்யப்பட்டதாக துஹின்காந்த் கூறினார். இனி ஏர்இந்தியா நிறுவன உரிமையாளர் டலைஸ் பிரைவேட் லிமிட் என்றும் விளக்கமளித்தார்.

டாடா நிறுவனத்தால் தொடங்கப்பட்ட ஏர் இந்தியா நிறுவனம் சுமார் 69 ஆண்டுகளுக்குப் பின்பு மீண்டும் அந்த நிறுவனத்திடமே சேர்ந்தது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top