டேஸ்ட்டியான சங்கரா மீன் குழம்பு ரெசிப்பி!!

56d96a5ea3475f52d95a747dc91e00a3-2

பொதுவாக மீன் வகைகளில் அதிகம்பேர் விரும்பிச் சாப்பிடும் மீன் வகைதான் சங்கரா மீன் ஆகும். இப்போது டேஸ்ட்டியாக சங்கரா மீன் குழம்பு ரெசிப்பி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையானவை :
சங்கரா மீன் – 500 கிராம்
கடுகு – 1 ஸ்பூன்
சின்ன வெங்காயம் – 10
தக்காளி – 1
வெந்தயம்- ½ ஸ்பூன்
பூண்டு- 1
சீரகம் – 1 ஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிதளவு
புளி – 1 எலுமிச்சை அளவு
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை :

1. மீனை கழுவி சுத்தம் செய்து கொள்ளவும். அடுத்து தக்காளியை நறுக்கி கொள்ளவும். புளியை தண்ணீரில் நன்கு ஊற வைத்து கரைத்துக் கொள்ளவும்.
2. அடுத்து வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, வெந்தயம், சீரகம், கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும், மேலும் வெங்காயம், பூண்டு மற்றும் தக்காளியை சேர்த்து வதக்கவும்.
3. அடுத்து அரைத்து வைத்த மசாலாவைச் சேர்த்து உப்பு, தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.
4. அடுத்து மீன் துண்டுகளைப் போட்டு எண்ணெய் பிரியும் போது இறக்கினால் சங்கரா மீன் குழம்பு ரெடி.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.