டேஸ்ட்டியான இறால் ப்ரைடு ரைஸ்!!

619ce97df58102ac21c531975795837f

தேவையானவை: 
பாசுமதி அரிசி – இரண்டு டம்ளர்
முட்டைகோஸ் – கால் அளவு
கேரட் – 2
குடைமிளகாய் – 1
பெரிய வெங்காயம் – 1
இஞ்சி – பூண்டு பேஸ்ட் – 2 ஸ்பூன்
பச்சை மிளகாய் – 2
இறால் – 250 கிராம்
சோயா சாஸ் – 2 ஸ்பூன்
சில்லி சாஸ் – 2 ஸ்பூன்
முட்டை- 2
மிளகுத்தூள் – ½ ஸ்பூன்
நெய் – 2 ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
வெங்காயத்தாள் – தேவையான அளவு
எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை:
1.    பாசுமதி அரிசியை உதிரியாக வடித்துக் கொள்ளவும். இறாலை சுத்தம் செய்து கொள்ளவும். வெங்காயம், குடை மிளகாய், முட்டைக்கோஸ், கேரட், பச்சை மிளகாய், வெங்காயத்தாளினை நறுக்கிக் கொள்ளவும். 
2.    அடுத்து வாணலியில் நெய் மற்றும் எண்ணெய் ஊற்றி வெங்காயம், இஞ்சி பூண்டு பேஸ்ட், குடை மிளகாய், பச்சை மிளகாய், முட்டை கோஸ், கேரட் போட்டு வதக்கவும்,
3.    அடுத்து இறாலை போட்டு வதக்கி, முட்டைகளை ஊற்றி கிளறி உப்பு, சோயா சாஸ், சில்லி சாஸ், மிளகுத்தூள் போட்டு கிளரவும்.
4.    அடுத்து வெங்காயத்தாளை தூவி இறக்கினால் இறால் ப்ரைடு ரைஸ் ரெடி.
 

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.