டேஸ்ட்டியான உருளைக்கிழங்கு பொரியல் ரெசிப்பி!!

f4310282799e17f1d1d197436f7136ad-1

உருளைக்கிழங்கு பொரியல் ஆனது சாம்பார், தயிர் சாதம், ரசம் சாதம் போன்றவற்றிற்கு சூப்பரான காம்பினேஷனாக இருக்கும். இந்த உருளைகிழங்கில் இப்போது பொரியல் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையானவை:
உருளைக்கிழங்கு – 250 கிராம்
வெங்காயம் – 3
மல்லித் தூள் – 2 ஸ்பூன்
சீரகத் தூள் – 1 ஸ்பூன்
மிளகாய்த் தூள் – 1 ஸ்பூன்
மஞ்சள் தூள் – 3/4 ஸ்பூன் 
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – தேவையான அளவு
கடுகு – ¼ ஸ்பூன்
கறிவேப்பிலை – தேவையான அளவு

செய்முறை
1.    உருளைக்கிழங்கினை சிறுசிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். அடுத்து வெங்காயத்தை நறுக்கிக் கொள்ளவும்.
2.    அடுத்து வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு போட்டு தாளித்துக் கொள்ளவும்.
3.    அடுத்து வெங்காயம், உருளைக்கிழங்கு, மல்லித் தூள், சீரகத் தூள், மிளகாய்த் தூள், மஞ்சள் தூள், உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து வேகவிடவும்.
4.    இறுதியில் இதில் கறிவேப்பிலை சேர்த்து இறக்கினால் உருளைக்கிழங்கு பொரியல் ரெடி.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.