டேஸ்ட்டியான உருளைக் கிழங்கு வறுவல்!!

5e71934ecdf60ff340de74100147a4fa-2

உருளைக் கிழங்கில் செய்யப்படும் பொரியல், கூட்டு, வறுவல், சிப்ஸ் வகைகள் அனைத்தும் அனைவராலும் விரும்பிச் சாப்பிடும் உணவு வகையாகும். இப்போது நாம் உருளைக் கிழங்கில் வறுவல் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையானவை:
உருளைக் கிழங்கு -1 /2 கிலோ
வெங்காயம்-3
மிளகுத் தூள்- 2 ஸ்பூன்
கடுகு- ½ ஸ்பூன்,
சீரகம்-1/2 ஸ்பூன்
எண்ணெய்-தேவையான அளவு 
உப்பு-தேவையான அளவு
கறிவேப்பிலை-தேவையான அளவு

செய்முறை:
1. உருளைக் கிழங்கை வட்டவடிவில் மெலிதாக நறுக்கிக் கொள்ளவும்.
2. அடுத்து வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
3. அடுத்து வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, சீரகம், கறிவேப்பிலை போட்டு தாளித்து வெங்காயத்தைப் போட்டு வதக்கவும்.
4. அடுத்து உப்பு, உருளைக் கிழங்கு போட்டு தண்ணீர் தெளித்து வேகவிடவும்.
5. அடுத்து இந்த உருளைக் கிழங்கு கலவையில் மிளகுத் தூள் தூவி இறக்கினால் உருளைக் கிழங்கு வறுவல் ரெடி.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.