டேஸ்ட்டியான மாங்காய் தொக்கு ரெசிப்பி!!

42d5e9d581bef025bc790f8e2621bf8d-1

மாங்காயில் பொதுவாக நாம் ஊறுகாய்தான் செய்து தயிர் சாதம் அல்லது ரசம் சாதத்திற்கு வைத்து சாப்பிடுவோம். இத்தகைய மாங்காயில் நாம் இப்போது தொக்கு செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையானவை:
மாங்காய் – 1
கடுகு – 1 ஸ்பூன்
வெந்தயத் தூள் – 1/2 ஸ்பூன்
மிளகாய்த் தூள் – 1 டீஸ்பூன்
தனியாத் தூள் – ½ ஸ்பூன்
பெருங்காயத்தூள் – 1/2 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை :
1. மாங்காயை துருவியால் துருவிக் கொள்ளவும்.
2. அடுத்து வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு போட்டு தாளிக்கவும்.
3. அடுத்து மாங்காயை வதக்கி வெந்தயத் தூள், தனியாத் தூள், மிளகாய்த் தூள், பெருங்காயத்தூள், உப்பு சேர்த்து தண்ணீர் தெளித்து வதக்கவும்.
4. அடுத்து நன்கு வதங்கி எண்ணெய் பிரிந்து வந்தால் மாங்காய் தொக்கு ரெடி.
 

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews