தித்திப்பான திராட்சை அல்வா ரெசிப்பி!!

dc37bf5b320f7716e58de39cd2702dcb

இதுவரை நாம் ஆப்பிள், வாழைப்பழம் போன்றவற்றில் அல்வா செய்வது எப்படி என்று பார்த்திருக்கிறோம். அந்தவகையில் இப்போது திராட்சையில் அல்வா செய்வது எப்படி என்று பார்க்கலாம். 

தேவையானவை:
திராட்சை — 1/2 கிலோ
சர்க்கரை – ½ கப்
ரவை – ½ கப்
முந்திரி – தேவையான அளவு
நெய் – கால் லிட்டர்

செய்முறை:
1.    ரவையை வாணலியில் போட்டு லேசாக வறுத்து மிக்சியில் போட்டு மைய அரைத்துக் கொள்ளவும். அடுத்து முந்திரியை நெய்யில் வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
2.    அடுத்து திராட்சையைக் கழுவி அதில் உள்ள கொட்டைகளை நீக்கி மிக்சியில் போட்டு அரைத்துக் கொள்ளவும்.
3.    அரைத்த கலவையை ஒரு பாத்திரத்தில் போட்டு கொதிக்கவிட்டு, ரவை, சர்க்கரையைச் சேர்த்து கிளறி நெய் ,முந்திரி பருப்பு சேர்த்து கிளறி இறக்கினால் திராட்சை அல்வா ரெடி.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.