டேஸ்ட்டியான சிக்கன் உப்புக்கறி ரெசிப்பி!!

ecc6042100586981b21097bf904d6801

சிக்கனில் நாம் இன்று மிகவும் வித்தியாசமான ஆனால் அனைவரும் விரும்பிச் சாப்பிடும் வகையிலான ஒரு ரெசிப்பியைத் தான் எப்படி செய்வது என்று பார்க்கப் போகிறோம். 

தேவையானவை:
சிக்கன் – 250 கிராம்
இஞ்சி பூண்டு பேஸ்ட் – 2 ஸ்பூன்
கரம் மசாலா – 2 ஸ்பூன்
மஞ்சள் தூள் – 1 ஸ்பூன்
காய்ந்த மிளகாய் – 5
வெங்காயம் – 1 
மிளகுத் தூள் – 1 ஸ்பூன்
கொத்தமல்லி – சிறிதளவு
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – தேவையான அளவு
கறிவேப்பிலை – தேவையான அளவு

செய்முறை:
1. சிக்கனை சுத்தம் செய்து கொள்ளவும். அடுத்து வாணலியில் எண்ணெய் ஊற்றி சிக்கன், உப்பு, இஞ்சி பூண்டு பேஸ்ட், மஞ்சள் தூள் மற்றும் கரம் மசாலா, தண்ணீர் சேர்க்கவும்.
2. இதனை வேகவிட்டு அடுத்து வாணலியில் எண்ணெய் ஊற்றி கறிவேப்பிலை, மிளகாய் சேர்த்து தாளித்து வெங்காயம், இஞ்சி பூண்டு பேஸ்ட், வேகவைத்த சிக்கன், மிளகுத் தூள் சேர்த்துக் கிளறவும்.
3. இறுதியாக கொத்தமல்லியை நறுக்கிப் போட்டு இறக்கினால் சிக்கன் உப்பு கறி ரெடி.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.