டேஸ்ட்டியான வாழைப்பழ புட்டிங்!!

146651d61bf8f29f5871fd58d1a18c5c-1

வாழைப்பழம் செரிமான சக்தியினை மேம்படுத்துவதாக உள்ளது, இத்தகைய வாழைப்பழத்தில் புட்டிங் செய்வது எப்படி என்று இப்போது பார்க்கலாம்.

தேவையானவை:
வாழைப்பழம்-1
முட்டை-1
சோளமாவு- 1 ஸ்பூன்
மைதா மாவு- 1 ஸ்பூன்
சர்க்கரை- 2 ஸ்பூன்
தேங்காய்- ½ மூடி
பாதாம் பருப்பு- 5
முந்திரிப்பருப்பு- 5

செய்முறை: 
1.    வாழைப்பழத்தை தோல் உரித்து நன்கு மசித்துக் கொள்ளவும். அடுத்து மிக்சியில் சர்க்கரையைப் போட்டு நன்கு பொடித்துக் கொள்ளவும். தேங்காயை துருவிக் கொள்ளவும்.
2.    அடுத்து முட்டையை நுரை பொங்க அடித்துக் கொள்ளவும். பாதாம் மற்றும் முந்திரிப் பருப்பினை பொடித்துக் கொள்ளவும்.
3.    அடுத்து ஒரு பாத்திரத்தில் மசித்த வாழைப்பழம், அடித்த முட்டை, பொடித்த சர்க்கரை, சோளமாவு, மைதா மாவு, தேங்காய்த் துருவல், பாதாம் மற்றும் முந்திரி சேர்த்து கலந்து கொள்ளவும்.
4.    இதனை நெய் தடவிய ஒரு பாத்திரத்தில் கொட்டி அதனை நீர் கால் அளவு நிரப்பிய மற்றொரு பாத்திரத்தில் வைத்து அரை மணி நேரம்  ஆவியில் வேகவிடவும்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.