பள்ளி, கல்லூரி, வழிபாட்டு தலங்களை மூடியது போல் டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும்!: ஓபிஎஸ்

கடந்த வருடம் முழுவதும் இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலையே அதிகமாக பேசப்பட்டது. அதன்பின்னர் கொரோனாவின் 2வது அலை இந்தியாவின் பெரும் முயற்சியால் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. இந்த சூழலில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்திற்கு பின்னர் கொரோனாவின் பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கிவிட்டது.

இதன் விளைவாக ஒவ்வொரு மாநிலத்திலும் அடுத்தடுத்து ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வந்தன. இந்த சூழ்நிலையில் இந்தியாவில் மூன்றாவது அலை தொடங்கி விட்டதாக மருத்துவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இதனால் நம் தமிழகத்திலும் இன்று முழு நேர ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளது.

அதோடு மட்டுமில்லாமல் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய மூன்று தினங்களில் வழிபாடு தளங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில் தமிழகத்தின் எதிர்க்கட்சியான அதிமுக வின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

கொரோனாவின்  3வது அலை வேகமாக பரவி வரும் நிலையில் டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார். பள்ளி, கல்லூரி, வழிபாட்டு தலங்கள் மூடப்பட்ட நிலையில் டாஸ்மாக் கடைகளையும் திறப்பதால் கொரோனா அதிகரிக்கும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.கொரோனா உச்சத்தை ஓரளவுக்கு தளர்த்த வேண்டுமெனில் மதுபான கடைகளை உடனே மூட வேண்டும் என்று தமிழக அரசுக்கு ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment