ஊரக உள்ளாட்சி தேர்தல்: எத்தனை நாள் டாஸ்மாக் மூடப்படும்?

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி மற்றும் தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் அக்டோபர் 6 மற்றும் அக்டோபர் 9 என இரண்டு கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த தேர்தலுக்கான அனைத்து பணிகளும் முடிவடைந்து விட்டது என்பதும் தேர்தல் பாதுகாப்புக்கான பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தேர்தலின் போது வன்முறை ஏற்படக்கூடாது என்பதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக டாஸ்மாக் கடைகளை மூட தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது

tea tasmacஎந்தெந்த நாட்களில் தேர்தலில் டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என தேர்தல் ஆணையம் கூறியிருப்பதாவது

முதல் கட்ட தேர்தல் நடைபெறும் தொகுதிகளில் அக்டோபர் 4ஆம் தேதி முதல் அக்டோபர் 6 ஆம் தேதி டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும்

இரண்டாம் கட்ட தேர்தல் நடைபெறும் தொகுதிகளில் அக்டோபர் 7 ஆம் தேதி முதல் அக்டோபர் 9ஆம் தேதி வரை டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும்

வாக்கு எண்ணிக்கை நாளான அக்டோபர் 12ஆம் தேதி 9 மாவட்டங்களிலும் முதல் கட்ட தேர்தல் நடைபெறும் தொகுதிகளில் அக்டோபர் 6 ஆம் தேதி டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும்.

 

tasmac closed9 tasmac closed9a

 

 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment