Connect with us

திடீரென மூடப்பட்ட டாஸ்மாக் கடைகள்: என்ன காரணம்?

tasmac

News

திடீரென மூடப்பட்ட டாஸ்மாக் கடைகள்: என்ன காரணம்?

திடீரென மூடப்பட்ட டாஸ்மாக் கடைகள்: என்ன காரணம்?

தமிழகத்தில் இன்று ஒரு சில மாவட்டங்களில் உள்ள டாஸ்மாக் கடைகள் திடீரென மூடப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடம் என்ற பகுதியைச் சேர்ந்த டாஸ்மாக் ஊழியர்கள் இருவர் நேற்று கடையை அடைத்துவிட்டு வீட்டிற்கு சென்று கொண்டிருந்தபோது மர்ம நபர்களால் தாக்கப்பட்டனர். இதில் துளசி ராஜ் என்பவர் உயிரிழந்ததாகவும் ராம் என்பவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் டாஸ்மாக் ஊழியர்களின் மீதான தாக்குதலை கண்டித்து தமிழகத்தில் உள்ள பெரும்பாலான மாவட்டங்களில் உள்ள டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன. டாஸ்மாக் ஊழியர்களை தாக்கிய குற்றவாளிகளை கண்டுபிடிக்க வேண்டும் என்றும் டாஸ்மாக் ஊழியர்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்து இன்று கடைகள் மூடப்பட்டுள்ளன என்று தெரிகிறது.

சென்னை பொருத்தவரை மைலாப்பூர், வள்ளுவர் கோட்டம், மதுரவாயல், ராயபுரம், திருவொற்றியூர் ஆகிய பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகளை அடைக்கப்பட்டதாகவும் சேலம் திண்டுக்கல் தேனி காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள கடைகள் அடைக்கப்பட்டு உள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top