Connect with us

மது பிரியர்களுக்கு செக்… 3 நாட்கள் டாஸ்மாக் கடைகள் மூடல்!!

tea tasmac

தமிழகம்

மது பிரியர்களுக்கு செக்… 3 நாட்கள் டாஸ்மாக் கடைகள் மூடல்!!

தமிழகத்தில் இடைத்தேர்தல் நடைபெற உள்ள சூழலில் தேர்தல் ஆணையம் பல்வேறு நடைமுறைகள் கொண்டுவந்துள்ளது.

இந்நிலையில் வார்டு உறுப்பினர், ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்களுக்கு ஆகிய பதவிகளுக்கான இடைத்தேர்தல் வருகின்ற சனிக்கிழமை நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.

இந்த சூழலில் இடைத் தேர்தலின் வாக்கு பதிவானது வருகின்ற 12-ஆம் தேதி நடைபெறும் என்றும் தெரிவித்துள்ளது. இதனை கருத்தில் கொண்டு மதுரை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதன்படி வருகின்ற 9 முதல் 12ஆம் தேதி வரையில் சுமார் ஐந்து கிலோமீட்டர் தொலைவில் உள்ள டாஸ்மாக் கடைகள், மது அருந்தும் இடங்களை மூட வேண்டும் என அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

மேலும், இத்தகைய அறிவிப்பை மீறி டாஸ்மாக் உரிமையாளர்கள் மது விற்பது தெரியவந்தால் கடை மேற்பார்வையாளர் மற்றும் கடையின் உரிமையாளர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top