ப்ளீஸ் டாஸ்மாக் கடையை மூடுங்க.. காலில் விழுந்த பாமக எம்எல்ஏ!!

சேலம் மாவட்டம் ஓமலூர் அடுத்த முத்து நாயக்கன்பட்டி பகுதியில் அரசு மதுபான கடை ஒன்று இயங்கி வருகிறது.

இந்நிலையில் பொதுமக்கள் அதிகம் வசிக்கும் பகுதி என்பதால் மதுபான கடை இயக்க பொதுமக்கள் தடை விதித்து இருந்தனர்.

அதே சமயம் பள்ளி மாணவிகளுக்கு அடிக்கடி போதை ஆசாமிகளால் பாதிக்கப்படுவதாகவும் குற்றம்சாட்டினர். இதன் காரணமாக கடந்த மாதம் 7ஆம் தேதி பாமக எம்.எல்.ஏ சார்பில் போராட்டம் நடைப்பெற்றது.

குறிப்பாக ஒரு மாதத்திற்குள் அரசு மதுபான கடையை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என வலியுறுத்தினர். இருப்பினும், அதே இடத்தில் மதுபான கடை இயங்கி வந்ததாக தெரிகிறது.

இதன் காரணமாக பாமக எம்.எல்.ஏ அருள் மது கடை மூடுவதற்கான கால அவகாசம் முடிந்து விட்டதாகவும், நாளைய தினத்தில் திறக்க வேண்டாம் என காலில் விழுந்தது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment