டல் அடித்த புத்தாண்டு மது விற்பனை

பொதுவாக மது விற்பனையை அதிகரிக்க நம்மூர் குடிமகன்கள் பலருக்கு சொல்ல வேண்டியதில்லை அவர்களே அரசுக்கு வருமானத்தை பெருக்கி கொடுக்க தயங்க மாட்டார்கள்.

தீபாவளி, பொங்கல், புத்தாண்டு போன்றவற்றுக்கு அதிக அளவு மது வாங்கி ஒவ்வொரு வருடமும் மது விற்பனையில் பெரிய அளவில் விற்பனை இலக்கை அடைவர்.

இந்த வருடம் இன்று பிறந்த புத்தாண்டுக்கு நேற்று போதிய அளவு மது விற்கவில்லையாம்.

சென்னையில் 41.45 கோடிக்கும்

திருச்சியில் 26.52 கோடிக்கும்

சேலத்தில் 25.43 கோடிக்கும்

மதுரை- 27.44 கோடிக்கும்

கோவை 26.85 கோடிக்கும் ஆக மொத்தம் 147 கோடிக்கும் மது விற்பனை ஆகியுள்ளது. இது கடந்த முறை இருந்ததை விட மிகவும் குறைவான விற்பனையாம் .

கடந்த வருட புத்தாண்டுக்கு  159 கோடிக்கு மது விற்பனை ஆகி இருந்தது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment