ஐந்து ஆண்டுகளாக நஷ்டத்தில் இயங்கும் டாஸ்மாக்: ஆர்.டிஐ தகவல்

f325ba1f6021d0926f5263233b2893bb

தமிழகத்தில் டாஸ்மாக் மிகப்பெரிய வருமானத்தை கொடுத்து வருவதாகவும் அந்த வருமானம்தான் தமிழக அரசின் வருமானத்தில் பெரும் பங்கு என்றும் கூறப்பட்டு வந்தது 
ஆனால் தகவல் அறியும் சட்டத்தின் படி டாஸ்மாக் ஐந்து ஆண்டுகளாக நஷ்டத்தில் இயங்கி வருகிறது என்றும், குறிப்பாக கடந்த 2013-14 ஆம் ஆண்டில் 100 கோடிக்கு மேல் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது 

டாஸ்மாக் நிர்வாகத்தின் வருமானம் எவ்வளவு அதன் விற்பனை எவ்வளவு என்பது குறித்த கேள்வியை காசிநாதன் என்பவர் தகவல் அறியும் உரிமைச்சட்டத்தில் கேட்டிருந்தார். இதற்கு பதிலளித்துள்ள தகவல் உரிமைச் சட்டம் கூறியிருப்பதாவது

டாஸ்மாக் நிறுவனம் கடந்த 2021-11ஆம் ஆண்டில் ரூ.3.56 கோடியும், 2011-12ல் ரூ.1.12 கோடியும், 20212-13ல் ரூ.103.64 கோடியும், 2013-14ல் ரூ.64.44 கோடியும், 2019-20ல் ரூ.64.44 கோடியும் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக தகவல் உரிமை சட்டத்தில் பதிலளிக்கப்பட்டுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment