மது பிரியர்களுக்கு செக்!! அக்டோபர் 2-ம் தேதி டாஸ்மாக் கடைகள் மூட உத்தரவு!!

தமிழகத்தில் ஆண்டுதோறும் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு அக்டோபர் 2-ம் தேதி விடுமுறை அளிக்கப்படுவது வாடிக்கையாக இருந்து வருகிறது. இந்த நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் அக்டோபர் 2-ம் மதுக்கடைகள் மூட மாவட்ட கலெக்டர் ஆர்த்தி உத்தரவிட்டுள்ளார்.

இந்நிலையில் அன்றைய தினத்தில் தயாரிப்பு அயல்நாட்டு மதுபான கடைகள், சாராயக்கடைகள் மற்றும் உணவனங்களில் உள்ள மதுபான கூடங்கள் முழுவதுமாக மூடப்படவேண்டும் என தெரிவித்தார்.

அதே போல் நபிகள் நாயகம் பிறந்தநாளான வரும் 9ம்தேதியும் அனைத்து இந்திய தயாரிப்பு அயல்நாட்டு டாஸ்மாக் மதுபான கடைகள் மற்றும் அதனுடன் இணைந்த மதுபான கடைகளை மூட வேண்டும் என கூறியுள்ளார்.

மேலும், இத்தகைய அறிவிப்பை மீறும் கடைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி கூறியுள்ளார்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.