டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனைக் கடைகளை இடமாற்றம் செய்யும்போது அதன் அமைவிடம் தேர்வு செய்வதற்கு முன்னர் மதுபான சில்லறை விற்பனைக் கடையில் கீழ்கண்ட வசதிகள் கண்டிப்பாக அமைந்திருக்கப்பட வேண்டும்.
1. பணியாளர்கள் மதுபானங்களின் இருப்பு (Ground Stock) வைத்தல் மற்றும்கையாண்டு விற்பனை செய்வதற்கும்.
2. மேஜை, நாற்காலிகள், குளிர்பதனப்பெட்டி ஆகியவை வைப்பதற்கும்,
3. கடைப் பணியாளர்கள் கடையின் உட்புறத்தில் அமர்ந்து விற்பனை செய்வதற்கு தேவையான இடவசதி,
4. பணப் பெட்டகம் வைப்பதற்கும்,
5. காலி அட்டைப்பெட்டிகள் வைப்பதற்கும்,
6. மேற்படி இடவசதி ஆகியவைகளை கருத்தில் கொண்டு மதுபான சில்லறை விற்பனைக் கடைகளை தேர்வு செய்வதற்கு குறைந்தபட்ச பரப்பளவு கொண்ட இடவசதி ஒரே அறையில் (Only one room) அமைந்திருக்கவும் மற்றும் உரிய ஆவணங்கள் பெற்று பரிந்துரைக்கப்பட வேண்டுமென அனைத்து மாவட்ட மேலாளர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.
அதன் விவரம் பின்வருமாறு:
மாநகராட்சி / நகராட்சி:
1. மாநகராட்சி / நகராட்சிகளில் அமையவுள்ள மதுபானக் கடைகளின் அளவு
குறைந்தபட்சம் 200 சதுரடி பரப்பளவு கொண்டதாக இருக்க வேண்டும்.
2. கடையின் பரப்பளவு தவிர்த்து கழிப்பறை தனியாக அமைந்திருக்க வேண்டும்.
3. தனி மின் இணைப்பு பெற்றிருக்க வேண்டும்.
4. கடையில் பாதுகாப்பு இரும்பு கதவு (Grill Gate) பொருத்தப்பட்டிருக்க வேண்டும்.
5. கட்டிட வரைபட ஒப்புதல் மற்றும் கட்டிட உறுதி சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
6. மாநகராட்சி / நகராட்சி சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
பேரூராட்சி:
1.பேரூராட்சிகளில் அமையவுள்ள மதுபானக் கடைகளின் அளவு குறைந்தபட்சம் 250
சதுரடி பரப்பளவு கொண்டதாக இருக்க வேண்டும்.
2. கடையின் பரப்பனவு தவிர்த்து வழிப்பறை தனியாக அமைந்திருக்க வேண்டும்.
3. தனி மின் இணைப்பு பெற்றிக்க வேண்டும்.
4. கடையில் பாதுகாப்பு இரும்பு கதவு (GrillGate) பொருத்தப்பட்டிருக்க வேண்டும்.
5. கட்டிட வரைபட ஒப்புதல் மற்றும் கட்டிட உறுதி சான்றிதழ் பெற்றிக்க வேண்டும்.
6. பேரூராட்சி சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
ஊராட்சி:
1. ஊராட்சி பகுதிகளில் அமையவுள்ள மதுபானக் கடைகளின் அளவு குறைந்தபட்சம் 250 சதுரடி பரப்பளவு கொண்டதாக இருக்க வேண்டும்.
2. கடையின் பரப்பளவு தவிர்த்து கழிப்பறை தனியாக அமைந்திருக்க வேண்டும்.
3. தனி மின் இணைப்பு பெற்றிக்க வேண்டும்.
4. கடையில் பாதுகாப்பு இரும்பு கதவு (Grill Gate) பொருத்தப்பட்டிருக்க வேண்டும்.
5. கட்டிட வரைபட ஒப்புதல் மற்றும் கட்டிட உறுதி சான்றிதழ் பெற்றிக்க வேண்டும்.
6. ஊராட்சி சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
மேற்குறிப்பிட்ட இடவசதி கடை அமைப்பது தவிர அதே அளவில் மதுக்கூடமும் அமைக்க தேவையான இடவசதி இருப்பதை உறுதி செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது எனக்குறிப்பிடப்பட்டுள்ளது.