மதுப்பிரியர்களுக்கு அதிர்ச்சி செய்தி… இன்று முதல் மதுபானங்கள் விலை உயர்வு… குவாட்டர் எவ்வளவு தெரியுமா?

தமிழ்நாடு மாநில வாணிபக் கழகம் தமிழகத்தில் மது வகைகளை வர்த்தகம் செய்யும் அரசு நிறுவனம். இந்நிறுவனம் தமிழகத்தில் மதுபானங்களை மொத்த மற்றும் சில்லறை வர்த்தகம் செய்ய ஏகபோக உரிமை பெற்றுள்ளது. தமிழக அரசின் வருவாய் ஈட்டும் முக்கிய காரணியாக டாஸ்மாக் செயல்பட்டு வருகிறது.

இந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி, டாஸ்மாக் மதுபானக்கடைகளில் குவாட்டர் ஒன்றுக்கு சாதாரண ரகங்களுக்கு 10 ரூபாய் உயர்த்தப்படுகிறது. மீடியம் மற்றும் உயர்ரக மதுபானங்களுக்கு 20 ரூபாய் உயர்த்தப்படுகிறது. ஆஃப் பாட்டிலுக்கு சாதாரண மதுபான ரகங்களுக்கு 20 ரூபாய் உயர்த்தப்படுகிறது. மீடியம் மற்றும் உயர் ரக மதுபானங்களுக்கு 40 ரூபாய் உயர்த்தப்படுகிறது.

அதேபோல், ஃபுல் பாட்டிலுக்கு சாதாரண ரகங்களுக்கு 40 ரூபாய் உயர்த்தப்படுகிறது. மீடியம் மற்றும் உயர் ரக மதுபானங்களுக்கு 80 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. பீர் வகைகள் விலை 10 ரூபாய் உயர்த்தப்படுகிறது. இது தவிர, வழக்கம் போல் குவாட்டர் ஒன்றுக்கு ரூ.10 அதிகமாக கொடுக்க வேண்டும் என்பதும் டாஸ்மாக் கடைகளில் எழுதப்படாத விதி. இந்த விலை உயர்வின் மூலம் குவாட்டர் ஒன்றுக்கு ரூ.20 அதிகமாகும் என்பதால் மதுப்பிரியர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment