திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்தவர் அருண். இவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் திருவள்ளூரில் உள்ள கும்மிடிப்பூண்டி அருகே யாழினி நகரில் செயல்படும் டாஸ்மாக் கடையானது விவசாய நிலத்தில் திறக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
இந்த டாஸ்மாக் கடையினை அகற்ற டாஸ்மாக் நிர்வாகத்திற்கு கடந்த ஜனவரி மாதம் 13- ம் தேதி மனு அனுப்பியுள்ளதாகவும் இருப்பினும் எந்த ஒரு நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை அந்த மனுவில் குறிப்பிட்டு இருந்தார்.
இந்த மனு மீதான விசாரனையானது இன்று தலைமை நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரி, நீதிபதி பரத சக்கரவர்த்தி ஆகியோரின் அமர்வில் வந்தது. இதில் தமிழ்நாடு சில்லறை மது விற்பனை விதிகளின்படி விவசாய நிலங்களில் டாஸ்மாக் கடைகள் வைக்க கூடாது என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
மேலும், இந்த மனுவில் குறிப்பிட்ட டாஸ்மாக் கடையினை அகற்றி வேறொரு இடத்தில் வைக்க டாஸ்மாக் கடை நிர்வாகத்திற்கு அனுமதி அளித்து இந்த வழக்கை முடித்து வைத்தனர்.