டாஸ்மாக் நிறுவனத்திற்கு செக்; உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!

தமிழகத்தில் உள்ள டாஸ்மாக்குக்கு எந்தெந்த நிறுவனங்களிடம் இருந்து, எவ்வளவு விலைக்கு மதுபானங்கள் கொள்முதல் செய்யப்படுகிறது என்பது குறித்து விளக்கம் அளிக்க டாஸ்மாக் நிர்வாகத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

கோவையைச் சேர்ந்த வழக்கறிஞர் லோகநாதன் என்பவர், டாஸ்மாக்கில் மதுபானம் விற்பனை செய்ததன் மூலம் அரசுக்கு கிடைத்த வருமானம், ஊழியர்களுக்கான சம்பளம் என்பது குறித்து விளக்கம் அளிக்க தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் கடந்த 2015ம் ஆண்டு விண்ணப்பித்திருந்தார்.

அடுத்த 3 மணி நேரம்.. இடியுடன் கூடிய கனமழை பெய்யும் – வானிலை மையம்!

அப்போது மதுபானம் விற்பனை மற்றும் ஊழியர்களின் சம்பளம் எவ்வளவு? என்பதை குறித்து விளக்கம் அளிக்க முடியாது என டாஸ்மார்க் தெரிவித்து இருந்தது. இதனை எதிர்த்து கடந்த 2017-ம் ஆண்டில் மனுத்தாக்கல் செய்தார். இதில் மதுபானம் கொள்முதல் தொடர்பான விவரங்களை தாக்கல் செய்ய உத்தரவு பிறப்பித்து இருந்தார்.

இந்த மனு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அதில் ஏற்கனவே பிறப்பித்த உத்தரவுப்படி விவரங்களை சமர்ப்பிக்காத டாஸ்மாக்குக்கு ரூ.10,000 அபராத தொகையை அடையாறு புற்றுநோய் மருத்துவமனைக்கு செலுத்த வேண்டும் என நீதிபதி அனிதா சுமந்த் உத்தரவு பிறப்பித்திருந்தார்.

ரேஷன் கடை ஊழியர்களுக்கு ஊக்கத்தொகை: எவ்வளவு தெரியுமா?

மேலும், டாஸ்மாக்குக்கு எந்தெந்த நிறுவனங்களிடம் இருந்து, எவ்வளவு விலைக்கு கொள்முதல் செய்யப்படுகின்றன? என்பது குறித்த விவரங்களை வருகின்ற ஜனவரி 6-ம் தேதி சீல் வைத்த கவரில் விவரங்களை சமர்ப்பிக்க டாஸ்மாக் நிர்வாகத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.