அம்மாடியோவ் நேத்து ஒரு நாள் இத்தனை கோடியா? பொங்கல் நாளில் களைகட்டிய டாஸ்மாக்!

தமிழகத்தில் அதிகளவு வருமானம் கொடுக்கும் தொழிலாக காணப்படுகிறது டாஸ்மாக். இந்த டாஸ்மாக் கடைகளுக்கு அவ்வப்போது தடைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன. டாஸ்மாக் கடை நாளை விடுமுறை என்றால் அதற்கு முந்தைய தினமே கூட்டங்கள் அலை மோதிக் கொள்ளும்.

அந்தவகையில் நேற்றைய தினம் டாஸ்மாக் கடையில் வியாபாரம் களைகட்டி ஓடியதாக காணப்படுகிறது. இதனால் நேற்று ஒரு நாளில் மட்டும் டாஸ்மாக் கடையில் பல கோடிக்கு அதிகமாக மதுபானம் விற்பனை செய்யப்பட்டுள்ளது. அந்த படி தமிழ்நாட்டில் பொங்கல் நாளான நேற்றைய தினம் மட்டும் ரூபாய் 317 கோடிக்கு மதுபானம் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

சென்னையில் மட்டும் ரூபாய் 59.28 கோடிக்கு மதுபானம் விற்பனையாகியுள்ளது. கோவையில் ரூபாய் 59.75 கோடிக்கு மதுபான விற்பனை ஆகியுள்ளது. திருச்சியில் ரூபாய் 65.52 கோடிக்கு மதுபானம் விற்பனை ஆகியுள்ளது.

மதுரையில் ரூபாய் 68.76 கோடிக்கு மதுபான விற்பனை ஆகியுள்ளது. சேலத்தில் ரூபாய் 63.87 கோடி ரூபாய்க்கு மதுபானம் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் நேற்றைய தினம் தமிழகத்தில் டாஸ்மாக் வியாபாரம் களைகட்டி விற்பனையானது கண்முன்னே தெரிகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment