திரைப்படம் வசூலை தூக்கி சாப்பிட்ட டாஸ்மாக் வசூல்! நேற்று ஒரு நாள் மட்டும் எத்தனை கோடி தெரியுமா?

என்னதான் சினிமாவிற்கு அதிக அளவு ரசிகர்கள் இருந்தாலும் அவர்களை மிஞ்சும் அளவிற்கு அதிக வசூல் சாதனை புரிவது டாஸ்மார்க்கு தான். நம் தமிழகத்தில் அதிகம் வருமானம் கிடைக்கும் தொழில் எது என்று கேட்டால் பலரும் கூறுவது டாஸ்மார்க் தொழிலே தான்.

இந்த சூழலில் நேற்றைய தினம் பலரையும் ஆச்சரியப்படுத்தும் வகையில் மதுபானம் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்தது. அதன்படி நேற்று டாஸ்மாக்கில் ரூபாய் 217. 96 கோடிக்கு மதுபானம் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக சென்னை மண்டலத்தில் மட்டும் ரூபாய் 50.04 கோடிக்கு மதுபானம் விற்பனை ஆகியுள்ளது.

அதன் தொடர்ச்சியாக மதுரை மண்டலத்தில் நேற்றைய தினம் மட்டும் ரூபாய் 43.20 கோடிக்கு மதுபானம் விற்பனை செய்யப்பட்டுள்ளது. திருச்சி மண்டலத்தில் நேற்றையதினம் ரூபாய் 42.59 கோடி மதிப்பிலான மதுபானம் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

சேலம் மண்டலத்தில் ரூபாய் 40.85 கோடி மதிப்பிலான மது பானம் நேற்று ஒரு நாளில் மட்டும் விற்பனையாகியுள்ளது. கோவை மண்டலத்தில் ரூபாய் 41.25 கோடிக்கு மதுபானம் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இன்று முழு ஊரடங்கு என்பதால் மது குடிப்போர் நேற்று டாஸ்மாக் கடைகளில் மது வாங்கி குவித்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment