News
கொரோனா பீதியின்றி கல் எறிந்து விளையாடிய குடிகாரர்கள்

தமிழகம் முழுவதும் கொரோனா பீதி காரணமாக பள்ளி, கல்லூரிகள், கடைகள், தியேட்டர்கள் என அனைத்தும் மூடப்பட்டுள்ளன. இருப்பினும் டாஸ்மாக் கடைகள் மட்டும் இன்னும் மூடப்படவில்லை. டாஸ்மாக் பார்கள் மட்டுமே மூடப்பட்டுள்ளன என்பதால் குடிமகன்கள் டாஸ்மாக்கில் மதுவை வாங்கி ஆங்காங்கே உட்கார்ந்து குடித்து வருவதால் பெரும் பிரச்சினை ஏற்பட்டுள்ளது
இந்த நிலையில் ஈரோடு மாவட்டம் நெருஞ்சிப்பேட்டை என்ற பகுதியில் டாஸ்மாக்கில் மது வாங்கி குடித்த இருவரும் போதை தலைக்கேறி ஒருவர் மீது ஒருவர் கல்லெறிந்து விளையாடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதில் ஒருவர் வீசிய கல் இன்னொருவரின் மண்டையில் பட்டு, மண்டை பிளந்து ரத்தம் கொட்டியது. ரத்தம் சொட்டிய நிலையில் அவர் திருப்பி தனது எதிரியை நோக்கி கல் எறிந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது
இதனை அடுத்து இந்த சம்பவத்தை நேரில் பார்த்த அந்த பகுதி மக்கள் இதுபோன்ற நபர்களுக்கு கொரோனாஏன் தாக்கவில்லை என்றும் கொரோனாவைவிட கொடிய நோயாக இது இருக்கிறது என்றும் கமெண்ட் அடித்து வருகின்றனர். கொரோனா விவகாரத்தால் அனைத்து கடைகளும் மூடப்பட்டுள்ள நிலையில் டாஸ்மாக் கடைகளையும் மூடினால் மட்டுமே இது போன்ற சம்பவங்களை தவிர்க்க முடியும் என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.,
