60,000 விவசாயிகளுக்கு தார்ப்பாயா? கடந்த ஆட்சி தர்மாகோல் போல இருக்குமோ??
இன்றைய நாளை விவசாயிகள் மிகவும் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்தனர். ஏனென்றால் இன்றைய தினம் தமிழகத்தில் வேளாண் துறைக்கான பட்ஜெட் அறிவிக்கப்பட்டு வருகிறது. இதனை தமிழகத்தின் வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் சட்டப்பேரவையில் அறிவித்து வருகிறார்.
இதில் விவசாயிகளுக்கு தேவையான ஒவ்வொரு பிரிவுக்கும் பட்ஜெட்டை தாக்கல் செய்து வந்தார். அந்த வகையில் தற்போது மழையில் பயிர்கள் சேதம் அடையாமல் தடுக்க புதிய திட்டம் ஒன்றினை அறிவித்துள்ளார்.
அதன்படி அதன் முதல் கட்டமாக 60 ஆயிரம் விவசாயிகளுக்கு தார்ப்பாய் வழங்கப்படும் என்று கூறியுள்ளார். அதன்படி மழையிலிருந்து விவசாய பொருட்களை பாதுகாக்க 60,000 விவசாயிகளுக்கு தார்ப்பாய் வழங்கப்படும் என்று அமைச்சர் பன்னீர்செல்வம் கூறினார்.
ஆறு ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த 36 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டதாகவும் அவர் கூறினார். ட்ரோன் மூலம் பூச்சி மருந்துகள் தெளிக்க நடவடிக்கை எடுக்க உள்ளதாகவும் வேளாண் துறை அமைச்சர் பன்னீர்செல்வம் கூறினார்.
60 ட்ரோன்களை வாங்குவதற்கும் பயிற்சி, செயல் விளக்கத்திற்கும் ரூபாய் 10.32 கோடி ஒதுக்கீடு உள்ளதாகவும் அவர் கூறினார்.
