சிறுமி தான்யாவின் கல்வி செலவு.. அமைச்சர் நாசர் அதிரடி!!

முகச்சிதைவுக்கு அறுவை சிகிச்சை செய்து கொண்ட சிறுமி டானியாவுக்கு இலவச வீடு, படிப்பு செலவு அரசே ஏற்கும் என்று அமைச்சர் நாசர் தெரிவித்துள்ளார்.

கடந்த சில தினங்களுக்கு முன் அரியவகை முக சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட சிறுமி தான்யா இலவசமாக அறுவை சிகிச்சை செய்யுமாறு , தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்தார்.

இதனை ஏற்ற தமிழக அரசு பூந்தமல்லி அருகே தண்டலத்தில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். பின்னர் 10 போ் கொண்ட மருத்துவக் குழுவினா் சுமார் 9 மணி நேரம் சிறுமிக்கு அறுவை சிகிச்சை செய்தனர்.

இந்நிலையில் அறுவை சிகிச்சை செய்த பிறகு இன்று சிறுமி தான்யா டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். சிறுமியை வரவேற்கும் விதமாக அமைச்சர் நாசர் பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார்.

பின்னர் பேசிய அவர், தமிழக முல்வரின் உத்தரவின் பேரில் சிறுமி தான்யா குடும்பத்திற்கு தமிழக அரசு இலவச வீடு வழங்க பரிசீலனை செய்யப்பட்டு வருவதாக கூறினார். அதோடு அறுவை சிகிச்சைக்கு செலவான ரூ.15 லட்சம் தமிழக அரசு ஏற்கும் என கூறினார். மேலும், சிறுமியின் படிப்பு செலவையும் அரசு ஏற்கும் என்று கூறினார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment