டேங்கர் லாரி – அரசு பேருந்து நேருக்கு நேர் மோதி விபத்து: 15 பேர் படுகாயம்!

திருவண்ணாமலையில் ஆனந்தம்வாடியில் டேங்கர் லாரி மற்றும் அரசு பேருந்து நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் பேருந்தில் பயணித்த 15-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்தனர்.

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்துள்ள ஆனந்தம்வாடி பகுதியில் டேங்கர் லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது திருப்பத்தூர் சென்ற அரசு பேருந்து மீது டேங்கர் லாரி நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.

பொங்கல் பண்டிகை! 16,932 சிறப்பு பேருந்துகள் இயக்கம்!!

இதில் பேருந்தில் பயணித்த 14-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்தனர். தகலறிந்த சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மற்றும் மீட்பு படையினர் காயம் அடைந்தவர்களை மீட்டு செங்கம் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.

அதே போல் லாரி ஓட்டுனர் உட்பட 2 பேர் கவலைக்கிடமான நிலையில், அரசு மருத்துவ மனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

தீண்டாமை விவகாரம்: 2 பேரின் ஜாமின் மனு தள்ளுபடி!

விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், லாரி ஓட்டுநரின் கவன குறைவால் விபத்து ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.