Connect with us

தஞ்சை மாணவி தற்கொலை விவகாரம்: போலியானது மதமாற்ற புகார்!

உயிரிழப்பு

தமிழகம்

தஞ்சை மாணவி தற்கொலை விவகாரம்: போலியானது மதமாற்ற புகார்!

தஞ்சை மாணவி தற்கொலை விவகாரம்: போலியானது மதமாற்ற புகார்!

கடந்த சில நாட்களுக்கு முன்பு தஞ்சை பள்ளி மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். அவரின் தற்கொலையை மதமாற்றத்தின் காரணமாகவே செய்ததாக பாஜகவினர் புகார் எழுப்பினர்.

ஆனால் தஞ்சை எஸ் பி மாணவியின் வாக்குமூலத்தில் மதமாற்றம் பற்றி குறிப்பிடவில்லை என்று கூறினார். அதோடு மட்டுமில்லாமல் தந்தையின் புகாரிலும் மதமாற்றம் குறித்த எந்த ஒரு தகவலும் இடம்பெறவில்லை என்றும் அவர் கூறியிருந்தார். இந்த நிலையில் 2 நாட்களுக்கு முன்பு மாணவியின் தற்கொலைக்கு வீடியோவை பதிவு செய்தவர் ஆஜராகினர்.

பல கோணத்தில் அலசி ஆராய்ந்து விசாரித்ததில் மாணவி தற்கொலையில் மதமாற்ற புகார் போலி என்பது அம்பலமாகியுள்ளது. தஞ்சை பள்ளி மாணவி தற்கொலைக்கு மதம் மாற்றும் முயற்சி காரணம் என்ற புகார் போலி என்பது அம்பலமாகியுள்ளது.

பாஜக நிர்வாகி பதிவு செய்த வீடியோவில் மதம் மாற்றும் முயற்சி நடக்கவில்லை என மாணவி கூறும் காட்சி வெளியாகி பரபரப்பு உருவாகியுள்ளது. தற்கொலை முடிவுக்கு பள்ளி விடுதி வார்டன் சகாயமேரி வேலை வாங்கியது காரணம் என்று மாணவி வாக்குமூலம் அளித்த புதிய வீடியோ வெளியானது.

கட்டாய மதமாற்ற முயற்சி நடந்ததாக கூறி பாஜக, இந்து முன்னணியினர் போராட்டம் நடத்தி வரும் நிலையில் புதிய ஆதாரம் வெளியானது. மாணவியிடம் வேலை வாங்கியதாக கூறப்பட்ட பள்ளியின் விடுதி வார்டன் சகாயமேரி ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளார்.

பள்ளியில் பொட்டு வைக்க அனுமதி இல்லையா? என்று வீடியோவை பதிவு செய்தவர் மத கண்ணோட்டத்தில் கேள்வி எழுப்பியுள்ளார். மதம் சார்ந்த கோணத்தில் பொட்டு பற்றி  கேட்ட கேள்விக்கு மாணவி திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்தது புதிய வீடியோவில் இடம்பெற்றுள்ளது.

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்ட வீடியோவில் மாணவி பொட்டு வைப்பது குறித்த கேள்வி பதில் இடம்பெறவில்லை. புதிய வீடியோ மூலம் மாணவி மரணத்திற்கு மதம் மாற்ற முயற்சியை காரணம் என்று பாஜக, இந்து முன்னணியினர் கூறியது போலியான புகார் என்பது அம்பலமானது.

தஞ்சை மைக்கேல் பட்டியில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வந்த மாணவி கடந்த 19ஆம் தேதி தற்கொலை செய்து கொண்டார். மாணவி மரணத்திற்கு தனியார் பள்ளியின் மத மாற்ற முயற்சியை காரணம் என்று பாஜக மற்றும் இந்து அமைப்புகள் புகார் கூறின.

மதமாற்றம் நடந்ததா? என்ற கேள்விக்கு மாணவி ஆமாம் என்று சொல்வதுபோல் எடிட் செய்யப்பட்ட வீடியோ ஒன்றும் வெளியானது. பாஜக வெளியிட்ட அந்த வீடியோவில் மாணவியிடம் என்ன கேட்கப்பட்டது என்பது முழுமையாக வெளியிடப்படாததால் சந்தேகம் எழுந்தது.

இந்த நிலையில் புதிய வீடியோ வெளியாகி பாஜக புகாரை பொய் என்று நிரூபித்துள்ளது. மாணவியிடம் கேள்வி கேட்டு வீடியோ எடுத்தவர் இந்து அமைப்பை சேர்ந்த முத்துவேல் என்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

விஸ்வ இந்து பரிஷத் அமைப்பின் அரியலூர் மாவட்ட செயலாளராக உள்ள முத்துவேல் மாணவியின் வாக்குமூலத்தை 4 வீடியோக்களாக பதிவு செய்துள்ளார். அதில் மூன்று வீடியோக்களில் மாணவி மதமாற்ற புகாரை திட்டவட்டமாக மறுத்துள்ளது அம்பலமாகியுள்ளது.

மதமாற்றப் கூறும்படி சொல்லிக்கொடுத்து வீடியோ பதிவு செய்யப்பட்டதா? என்ற கோணத்தில் காவல்துறை விசாரணை நடத்திவருகிறது. நீதிபதி முன் கொடுத்த மரண வாக்குமூலத்தில் மதமாற்ற புகார் குறித்து மாணவி ஏதும் கூறவில்லை.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top