தஞ்சை மாணவி தற்கொலை விவகாரம்: ஆசிரியர் கைது!!
தஞ்சாவூர் மாவட்டம் வடசேரி கிராமத்தை சேர்ந்த சிறுமி ஒருவர் அங்குள்ள அரசு பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் மாணவிக்கு 11:30 மணி அளவில் திருப்புதல் தேர்வு நடைபெற இருந்தபோது மாணவியை காணவில்லை என தெரிகிறது.
இதனால் சந்தேகம் அடைந்த ஆசிரியர்கள் மாணவியின் வீடு தெரியாததால் மாணவியை தேடி அலைந்துள்ளனர். ஆகவே மாணவியின் சகோதரனிடம், வீட்டில் சென்று பார்த்து வருமாறு ஆசிரியர்கள் தெரித்துள்ளனர்.
அப்போது வீட்டிற்கு சென்ற சிறுமி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த சிறுவன் கூச்சலிட்டுள்ளான். இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மாணவி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த நிலையில் மாணவியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக
குற்றம்சாட்டிய உறவினர்கள், 2 ஆசிரியர்கள் மாணவியை தேடி வந்ததாக தெரிவித்துள்ளனர்.அந்த வகையில் அரசு பள்ளி ஆசிரியர் கணேசன் என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
