Connect with us

தஞ்சை பள்ளி மாணவி தற்கொலை விவகாரம்-சிபிஐ வழக்குப் பதிவு!

உயிரிழப்பு

தமிழகம்

தஞ்சை பள்ளி மாணவி தற்கொலை விவகாரம்-சிபிஐ வழக்குப் பதிவு!

தஞ்சை பள்ளி மாணவி தற்கொலை விவகாரம்-சிபிஐ வழக்குப் பதிவு!

கடந்த மாதம் முழுவதும் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது தஞ்சை மாணவி தற்கொலை தான். ஏனென்றால் தஞ்சை மாணவி தற்கொலை விவகாரத்தை மதம் மாற கட்டாயப்படுத்தியதால்தான் நிகழ்ந்தது என்ற குற்றச்சாட்டு எழுந்தது.

ஆனால் விசாரித்ததில் மாணவி தற்கொலைக்கு மதமாற்ற கட்டாயத்திற்கும் எந்த ஒரு சம்பந்தம் இல்லை என்ற உண்மை வெளி வந்தது. இது குறித்து தஞ்சை எஸ்பியும் இவ்வாறு கூறியிருந்தார். இதனால் வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது.

ஆனால் தஞ்சை மாணவி வழக்கை சிபிஐ விசாரிக்க அனுமதிக்க கூடாது என்று மேல் முறையீடு தேவைப்பட்டது. இருப்பினும் உச்சநீதிமன்றம் சிபிஐ விசாரணைக்கு அனுமதி அளித்தது. இந்த நிலையில் சிபிஐ தஞ்சை பள்ளி மாணவி மரணம் விவகாரத்தில் வழக்கு பதிவு செய்துள்ளது.

அதன்படி தஞ்சை பள்ளி மாணவி தற்கொலை விவகாரம் தொடர்பாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தது சிபிஐ. குழந்தைகளை தற்கொலைக்கு தூண்டுதல், குற்றம் செய்ய முயற்சி செய்தல், சிறார் நீதி சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளது .சிபிஐ விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ள நிலையில் வழக்கு பதிவு செய்தது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top