அஜித் நடித்த வேதாளம் உள்பட பல திரைப்படங்களில் வில்லன் வேடங்களில் நடித்தவர் ராகுல் தேவ். இவரை தனி ஒருவன் திரைப்படத்தில் நடித்த நடிகை ஒருவர் காதலிப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது
ஜெயம் ராஜா இயக்கத்தில் அரவிந்த்சாமி நடித்த தனிஒருவன் படத்தில் அரவிந்த்சாமி காதலியாக நடித்திருப்பவர் நடிகை முக்தா கோட்சே, ராகுல் தேவ்வை காதலித்து வருவதாகவும் இந்த காதலுக்கு வயது ஐந்து என்றும் கூறப்படுகிறது
52 வயதான ராகுல் தேவ்வை 34 வயதான முக்தா கோட்சே காதலிப்பது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. 18 வருட வயது வித்தியாசத்தில் வந்த காதல் குறித்து முக்தா கோட்சே கூறும்போது காதல் வயது பார்த்து வராது என்றும் மனசை பார்த்து வருவது என்றும் எனக்கு அவரைப் பார்த்ததுமே பிடித்து விட்டது என்றும் கூறியுள்ளார்
இதனை அடுத்து இருவருடைய திருமண தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று கூறப்படுகிறது. ராகுல் தேவ்க்கு ஏற்கனவே திருமணம் நடந்து மனைவி இறந்து விட்டார் என்பதும் அவருக்கு சித்தார்த் என்ற மகன் உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது