Career
தமிழ்நாடு மின்சார வாரியத்தில் கணக்கீட்டாளர் வேலைவாய்ப்பு அறிவிப்பு
தமிழ்நாடு மின்சார வாரியத்தில் நேரடி நியமனம் மூலம் 1300 கணக்கீட்டாளர் பணியிடங்கள் காலியாக இருப்பதாக தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்புக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

காலிப் பணியிடங்கள் :
கணக்கீட்டாளர் : 1300 காலிப்பணியிடம்
சம்பளம் :
ரூ. 19,500 முதல் 62,000/- வரை
கல்வித் தகுதி :
பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு அல்லது டிப்ளமோ தேர்ச்சி பெற்று, கலை அறிவியல் அல்லது வணிகவியல் பிரிவில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும், கூடவே அளவீட்டு கருவிகள் மூலம் கணக்கீட்டு செய்வதற்கும், மிதி வண்டி ஓட்டுவதற்கும் தெரிந்திருக்க வேண்டும்.
வயது வரம்பு :
01-07-2019 அன்றுள்ளபடி 35 வயது வரை விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பக் கட்டணம் :
- பொது பிரிவினர், பி.சி., எம்.பி.சி பிரிவை சார்ந்த விண்ணப்பதாரர்கள் ரூ. 1000 செலுத்த வேண்டும்.
- எஸ்.சி., எஸ்.டி. பிரிவை சார்ந்த விண்ணப்பதாரர்கள் ரூ. 500 செலுத்த வேண்டும்.
- அனைத்து பிரிவை சார்ந்த விதவைகள் மற்றும் மாற்றுத்திறனாளி விண்ணப்பதாரர்கள் ரூ. 500 செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை :
தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் http://www.tangedco.gov.in/ மூலமாக விண்ணப்பிக்க வேண்டும். மேலும் முழுமையான விவரங்களை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை http://www.tangedco.gov.in/linkpdf/Assessor_Notification_and_Annexures_2019-2020.pdf பார்த்து தெரிந்துகொள்ளவும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி : 13.02.2020
