மாணவர்களே அலர்ட்!! TANCET தேர்வு ஒத்திவைப்பு… எப்போது தெரியுமா?

கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக தமிழகத்தில் உள்ள அண்ணா பல்கலைக்கழகங்களில் TANCET தேர்வு நடைபெறாமல் இருந்து வந்தது.

இந்த நிலையில் MBA, MCA, M.E, M.Tech, M.Plan, M.Arch.ஆகிய படிப்புகளில் சேர TANCET நுழைவுத்தேர்வு 2023-ம் ஆண்டில் பிப்ரவரி 25,26-ம் தேதிகளில் நடைபெறும் என தமிழக அரசு தெரிவித்திருந்தது.

தற்போது TANCET நுழைவுத்தேர்வுக்கு அறிவிக்கப்பட்டிருந்த தேர்வு தேதிகள் இணையத்தில் இருந்து நீங்கியுள்ளதால் தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

இதன் காரணமாக விரைவில் தேர்வு தேதி அறிவிக்கப்படுவதாகவும், புதிய தேர்வு தேதியை https://tancet.annauniv.edu/ என்ற இணையத்தில் தேர்வர்கள் தெரிந்துகொள்ளலாம் என தெரிவித்துள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.