டான்செட் தேர்வுகள் திடீர் ஒத்திவைப்பு: அண்ணா பல்கலை அறிவிப்பு!

2023 ஆம் ஆண்டுக்கான டான்செட் தேர்வுகள் திடீரென ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளதால் மாணவர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

எம்இ, எம்டெக், எம்ஆர்க், எம்.பிளான்., எம்பிஏ, எம்சிஏ போன்ற முதுநிலைப் படிப்புகளில் சேருவதற்காக நுழைவுத் தேர்வு நடத்தப்படும் என்பதும் இந்த நுழைவுத் தேர்வு டான்செட் தேர்வு என்று கூறப்படும் என்பதும் தெரிந்ததே.

அண்ணா பல்கலைக்கழகம் ஒவ்வொரு ஆண்டும் டான்செட் தேர்வுகளை நடத்தி வரும் இந்த ஆண்டு தேர்வு கடந்த மே மாதம் நடைபெற்றது. இந்த நிலையில் 2023 ஆம் ஆண்டுக்கான டான்செட் நுழைவுத் தேர்வு பிப்ரவரி 25 மற்றும் 26 ஆம் தேதிகளில் நடைபெறுமென அண்ணா பல்கலைக்கழகம் ஏற்கனவே அறிவித்து இருந்தது.

ஆனால் சற்று முன் வெளியான தகவலின் படி 2023ம் ஆண்டு நடைபெறும் டான்செட் தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகவும், புதிய தேர்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும் டான்செட் தேர்வு எழுத விரும்பும் தேர்வர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என்றும் https://tancet.annauniv.edu/tancet/ என்ற இணையதளத்தை அணுகினால் விண்ணப்பிப்பதற்கான அனைத்து விவரங்களும் இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.